Kadhal rojavae

Movie: Roja

Singer: S. P. Balasubrahmanyam, Sujatha Mohan

Music: A. R. Rahman

Lyricist: Vairamuthu

Year: 1992

  • தமிழ்
  • English

ஆண்: காதல் ரோஜாவே, எங்கே நீ எங்கே
கண்ணீர் வழியுதடி கண்ணே

ஆண்: கண்ணுக்குள் நீ தான், கண்ணீரில் நீ தான்
கண் மூடி பார்த்தால் நெஞ்சுக்குள் நீதான்
என்னானதோ ஏதானதோ சொல் சொல்

ஆண்: காதல் ரோஜாவே, எங்கே நீ எங்கே
கண்ணீர் வழியுதடி கண்ணே

பெண்: ல..ல ல… லலலா… (humming)

ஆண்: தென்றல் என்னை தீண்டினால் சேலை தீண்டும் ஞாபகம்
சின்ன பூக்கள் பார்க்கையில் தேகம் பார்த்த ஞாபகம்
வெள்ளி ஓடை பேசினால் சொன்ன வார்த்தை ஞாபகம்
மேகம் இரண்டு சேர்கையில் மோகம்கொண்ட ஞாபகம்

ஆண்: வாயில்லாமல் போனால் வார்த்தையில்லை பெண்ணே
நீயில்லாமல் போனால் வாழ்க்கையில்லை கண்ணே
முள்ளோடு தான் முத்தங்களா சொல் சொல்

ஆண்: காதல் ரோஜாவே, எங்கே நீ எங்கே
கண்ணீர் வழியுதடி கண்ணே

ஆண்: கண்ணுக்குள் நீ தான், கண்ணீரில் நீ தான்
கண் மூடி பார்த்தால் நெஞ்சுக்குள் நீதான்
என்னானதோ ஏதானதோ சொல் சொல்

பெண்: ல..ல ல… லலலா… (humming)

ஆண்: வீசுகின்ற தென்றலே, வேலை இல்லை இன்று போ
பேசுகின்ற வெண்ணிலா, பென்மையில்லை ஓய்ந்து போ
பூ வளர்த்த தோட்டமே, கூந்தலில்லை தீர்ந்து போ
பூமி பார்க்கும் வானமே, புள்ளியாக தேய்ந்து போ

ஆண்: பாவையில்லை பாவை, தேவையென்ன தேவையே
ஜீவன் போன பின்னே, சேவை என்ன சேவை
முள்ளோடு தான் முத்தங்களா சொல் சொல்

ஆண்: காதல் ரோஜாவே, எங்கே நீ எங்கே
கண்ணீர் வழியுதடி கண்ணே

ஆண்: கண்ணுக்குள் நீ தான், கண்ணீரில் நீ தான்
கண் மூடி பார்த்தால் நெஞ்சுக்குள் நீதான்
என்னானதோ ஏதானதோ சொல் சொல்

Male: Kadhal rojavae, enge nee enge
Kanneer vazhiyudhadi kanne

Male: Kannukkul neethan, kanneeril neethan
Kan moodi paarthaal nenjukkul neethan
Ennaanadho edhaanadho sol sol

Male: Kadhal rojavae, enge nee enge
Kanneer vazhiyudhadi kanne

Female: La..la la… Lalalaa… (humming)

Male: Thendral ennai theendinaal selai theendum nyaabagam
Chinna pookkal paarkaiyil dhegam paartha nyaabagam
Velli odai pesinaal sonna vaarthai nyaabagam
Megam rendu sergaiyil mogam konda nyaabagam

Male: Vaay illaamal ponaal vaarthai illai pennae
Neey illaamal ponaal vaazhkai illai kanne
Mullodu dhaan muthangala sol sol

Male: Kadhal rojavae, enge nee enge
Kanneer vazhiyudhadi kanne

Male: Kannukkul neethan, kanneeril neethan
Kan moodi paarthaal nenjukkul neethan
Ennaanadho edhaanadho sol sol

Female: La..la la… Lalalaa… (humming)

Male: Veesugindra thendralae, velai illai indru po
Pesugindra vennilaa, penmai illai oyindhu po
Poo valartha thottamae, koondhal illai theirndhu po
Boomi paarkum vaanamae pulliyaaga theindhu po

Male: Paavai illai paavai, thevai enna thevai
Jeevan pona pinnae sevai enna sevai
Mullodu dhaan muthangala sol sol

Male: Kadhal rojavae, enge nee enge
Kanneer vazhiyudhadi kanne

Male: Kannukkul neethan, kanneeril neethan
Kan moodi paarthaal nenjukkul neethan
Ennaanadho edhaanadho sol sol